இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் ஆடைகளுக்கு தடை விதிப்பது தொடர்பாக அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அத்மிரால் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த ஆடைகளுக்கு தடை விரைவில் தடை விதிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை முன்வைத்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
எனினும் அமைச்சரவைக்கு குறித்த யோசனை முன்வைக்கப்படவில்லை என சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை குறித்த முடிவுக்கு பாகிஸ்தானிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Discussion about this post