மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ராகமை வைத்தியசாலையில் நேற்றிரவு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஒரு மணித்தியாலம் வரை மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.
இதனால், நோயாளர்கள், வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தினர் நேற்றிரவு பாரிய அசௌகரியத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
வைத்தியர்கள் தமது கையடக்கத் தொலைபேசி வெளிச்சத்தில் நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகின்றது. (TrueCeylon)