சீனாவிடமிருந்து 14 மில்லியன் சீனோபாம் கொவிட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஒரு மாத காலத்தில் 3 மில்லியன் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவிக்கின்றது.
அத்துடன், சீனாவினால் வழங்கப்படும் 5 லட்சம் தடுப்பூசிகளை எதிர்வரும் வாரத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் குறிப்பிடுகின்றது.
இதேவேளை, தடுப்பூசிகளை வழங்குகின்றமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் நேற்றைய தினம் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும் சீன தூதரகம் கூறுகின்றது.
Discussion about this post