கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 527ஆக அதிகரித்துள்ளது.
வெலிகம பகுதியைச் சேர்ந்த 73 வயதான ஆண்ணொருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபருக்கு, கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் ஹம்பாந்தோட்டை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த நபருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பலனின்றி, அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87,600ஆக அதிகரித்துள்ளது.
84,648 பேர் சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளதுடன், 2,426 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். (TrueCeylon)
Discussion about this post