இலங்கைக்கு எதிர்வரும் வாரங்கள் மிகவும் தீர்மானமிக்க வாரங்களாகியுள்ளதென சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவிக்கின்றார்.
நாட்டில் கொரோனா பரவும் அபாயம் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பொதுமக்கள், பயணங்களை குறைத்துக்கொண்டு, சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொழும்பு, கம்பஹா, திருகோணமலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். (TrueCeylon)
Discussion about this post