இலங்கையில் எதிர்வரும் 100 நாட்களுக்குள் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
5 அல்லது 6 நாட்களில் ஒருவரிடமிருந்து மற்றுமொருவருக்கு இந்த நோய் தொற்று ஏற்படும் பட்சத்தில், ஒவ்வொரு ஐந்து தினங்களுக்கும் ஒரு முறை நோயாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் சாத்தியம் எழுந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
அவ்வாறு ஏற்படுமாக இருந்தால், எதிர்வரும் 100 நாட்களில் நிச்சயமாக இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை (10 லட்சம்) எட்டும் சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
Discussion about this post