தபால்மூல வாக்குப்பதிவுக்கான வாக்குச்சீட்டுகளை முன்னதாக திட்டமிட்டபடி நாளை (15) வழங்க முடியாது என அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உரிய கொடுப்பனவுகள் செலுத்தப்படும் வரை தபால் மூல வாக்குச் சீட்டுகளை அச்சடிக்க அரச அச்சகங்கள் மறுத்துள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.(TrueCeylon)