கொரோனா வைரஸில் வெவ்வேறு புதிய விகாரங்கள் உருவாகி வருவதால், தடுப்பூசி மட்டும் இதற்கான பதில் இல்லை என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறினார்.
மேலும் தென்னாபிரிக்காவில் பரவி வரும் கோவிட் -19 வைரஸ் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அது எந்த நேரத்திலும் இலங்கையின் ஏனைய பகுதிகளுக்குள் நுழையக்கூடும் என்றும் எச்சரித்தார்.
தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு சுகாதார விதிகள் மற்றும் தனிமைப்படுத்தல்களை கடுமையாக அமல்படுத்த வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, தென்னாபிரிக்காவில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய விகாரம் இதுவரை இலங்கையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆய்வுகள் நடைபெறுவதாக டாக்டர் சந்திம ஜீவந்தர கூறினார்.
மேலும் இந்த வைரஸ் சமூகத்தின் பிற பகுதிகளிலிருந்து பதிவாகவில்லை என்றும் வலியுறுத்தப்பட்டது. (TrueCeylon)
Discussion about this post