இன்று (20) மாலை 4 மணி முதல், நாளை (21) மதியம் 12 மணி வரை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்றும், நாளைய தினமும் நடைபெறவுள்ள விசேட திருப்பலி ஒப்புக்கொடுத்தலை முன்னிட்டே இந்த விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக வாகனங்கள் பயணிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனித அந்தோனியார் மாவத்தை : ஜிந்துபிட்டி சுற்றுவட்டம் முதல் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் நோக்கி பயணிக்க தடை விதிக்கப்படுகின்றது.
இராமநாதன் மாவத்தை : ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தை நோக்கி வீதியில் பயணித்த தடை விதிக்கப்படுகின்றது.
கிறிஸ்டி பெரேரா மாவத்தை : ஜம்பட்டாவீதி பொலிஸ் நிலையத்திற்கு அருகிலிருந்து கொச்சிக்கடை தேவாலயம் நோக்கி வீதிக்குள் பிரவேசித்தல் மற்றும் வெளியேறுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதிகளை தவிர்த்து, மாற்று வீதிகளின் ஊடாக தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. (TrueCeylon)
Discussion about this post