நாட்டை மூன்று வாரங்களுக்கு முடக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அங்கம் வகிக்கும் 10 பங்காளிக்கட்சிகள் கூட்டாக ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளன.
நாட்டின் காணப்படும் கொரோனா நிலைமைக்கு மத்தியில், நாட்டை முடக்குமாறு ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி, கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறைந்தது மூன்று வாரங்களுக்கேனும் நாட்டை முடக்காத பட்சத்தில், கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து, வைத்தியசாலை கட்டமைப்பினால் பராமரிக்க முடியாத நிலைமை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இவ்வாறு மூன்று வாரங்களுக்கு நாட்டை முடக்க தவறும் பட்சத்தில், நாட்டின் நிலைமை மிக பாரதூரமானதாக மாறி விடும் எனவும் பங்காளிக்கட்சிகள் கூறியுள்ளன. (TrueCeylon)
Discussion about this post