ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய முகாமைத்துவ குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்றிரவு கட்சி பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.
இந்த சந்திப்பில் கட்சியின் மீள்கட்டமைப்பு பணிகளை முன்னெடுக்கும் விதம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜேலால் டி சில்வா தெரிவிக்கின்றார்.
இதேவேளை, அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் எந்தவொரு கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post