பாரசூட் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 8000 அடி உயரத்தில் இருந்து பரசூட் வீரர்கள் குதித்த போது பரசூட்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டு சிக்குண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அம்பாறையில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு வீரர்கள் இந்த விபத்தை சந்தித்ததாகவும், அதில் உயிரிழந்த நிலையில் மற்றைய வீரர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் ஒரு அதிகாரி இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post