இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா (Shri Harsh Vardhan Shringla) சற்றுமுன் நாட்டை வந்தடைந்துள்ளார்.
4 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளராக பதவியேற்ற பின் இவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
மேலும் வௌிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வரும் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பல முக்கிய சந்திப்புக்களை நடத்த உள்ளார்.