கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கையில் ஊரடங்கு உத்தரவை விதிக்க வேண்டுமா என்பதை அரசாங்கம் இப்போது ஆராய வேண்டும் என சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா கூறினார்.
கொரோனா முதல் அலை நாட்டில் பரவியபோது முன்னெடுக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவால் பாதிப்புகளும் கொரோனா பரவலும் நன்கு கட்டுப்படுத்தப்பட்டு இருந்தன.
எனினும் தற்போதைய நிலைமை நன்றாக இல்லை. எனவே, நாட்டுக்கு தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு போன்ற நிலைக்கு செல்ல வேண்டுமா என்ற கேள்வி உள்ளது.
இந்த நிலைமையை இறுக்குவது குறித்து அரசாங்கம் கவனிக்க வேண்டும் என்றார்.
Discussion about this post