கொவிட் தொற்றாளர்களுக்கு தேவையான ஒட்சிசனை கொண்டுவருவதற்காக கப்பலொன்று இலங்கையிலிருந்து இந்தியா நோக்கி புறப்பட்டுச்சென்றுள்ளது.
இலங்கை கடற்படைக்கு சொந்தமான ‘சக்தி’ என்ற கப்பலே இவ்வாறு திருகோணமலை துறைமுகத்திலிருந்து சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் மேலதிக ஒட்சிசன் தேவையை பூர்த்திசெய்ய 100 டன் ஒட்சிசனை இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளதாக அண்மையில் சுகாதார அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post