நாட்டில் கொவிட் தொற்று அதிகரித்துள்ள நிலையில், திருமண நிகழ்வுகளுக்கு தடை விதிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ள பின்னணியில், தனது சகோதரியின் மகளின் திருமணத்தை நடத்தியதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை, இராணும் நிராகரித்துள்ளது.
இராணுவ ஊடகப் பிரிவு இந்த மறுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் கொவிட் தொற்று அதிகரித்துள்ள பின்னணியில், திருமண நிகழ்வுகளை நடத்த இன்று (04) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொழும்பில் நேற்றைய தினம் (03) திருமண நிகழ்வொன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த திருமண நிகழ்வு இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் சகோதரியின் மகளுடையது என சமூக வலைத்தளங்களில் அதிகளவில் தகவல் பகிரப்பட்டு வருகின்றது.
இந்த நிலையிலேயே, குறித்த குற்றச்சாட்டை இராணுவம் நிராகரித்துள்ளது. (TrueCeylon)
Discussion about this post