நிறுவனங்களில் கடமைகளுக்குத் தேவையான ஊழியர்களை மட்டும் அழைக்குமாறு நிறுவனத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மேலும், இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளாதீர்கள் என்றும் இராணுவத் தளபதி மக்களிடம் கோரிக்கை விடுத்தார்.
ஊழியர்களின் விருப்பப்படி நிறுவனங்களுக்கு வரவழைக்கப்பட்டால் கோவிட் ஆபத்து அதிகரிக்கும் என்பதால் இந்த நேரத்தில் தேவையான ஊழியர்களை மட்டுமே அழைப்பது தலைவரின் பொறுப்பாகும்.
இதேவேளை, சில நிறுவனங்கள் அதிக ஊழியர்களை அழைப்பதாக தகவல்கள் வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்த நேரத்தில் நாட்டை மூடுவது பற்றி நாம் பேசக்கூடாது. நாடு மூடப்படாத வகையில் வேலை செய்வது அனைத்து குடிமக்களின் பொறுப்பாகும் என்றும் இராணுவத் தளபதி கூறினார்.
நாட்டை மூட வேண்டாம் என்று பெரும்பாலான மக்கள் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
எனினும் மக்கள் சுகாதாரச் சட்டங்களை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். (TrueCeylon)
Discussion about this post