களுத்துறை, கம்பஹா, திருகோணமலை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களின் 8 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று (26) இரவு 8 மணி முதல் தனிமைப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கம்பஹா மாவட்டத்தின் பொல்ஹேன, ஹிரலுகெதர, கம்பஹா களுஅக்கல, மினுவங்கொட எஸ்வென்னவத்த கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் மிகஹதென்ன, மிரிஸ்வத்த, பெலவத்த வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தின் பும்பூஹர் மற்றும் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் ஆகியன மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதென இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். (TrueCeylon)
Discussion about this post