போதைக்கு அடிமையானவர்களை எதிர்காலத்தில் சிறையில் அடைக்காமல் புனர்வாழ்வளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
2 கிராம் போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும், ஆனால் சில 2 கிராம் ஹெராயின் 100 மில்லிகிராம் கூட இருப்பதில்லை.
தடயவியல் அறிக்கை வரும் வரை அந்த நபர் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்.
அந்த நேரத்தில் அவர் ஒரு தீவிர குற்றவாளியாக வெளியே வருகின்றார்.. எனவே போதைக்கு அடிமையானவர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க உள்ளோம். அதற்கான விதிகளை நாங்கள் திருத்துவோம் என்றார்.
Discussion about this post