கண்டி − போகம்பர சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள 104 கைதிகளுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
211 கைதுகளுக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனைகளில் 104 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போகம்பர சிறைச்சாலையில் 536 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனைய கைதிகளுக்கும் PCR பரிசோதனைகளை உடனடி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போகம்பர சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post