மேல் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக வருகைத் தருவோர் சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறியுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
சுகாதார வழிமுறைகளை மீறி, கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் எந்தவித நன்மையும் கிடையாது என கொழும்பு சுகாதார அபிவிருத்தி அலுவலகத்தின் பணிப்பாளர் டொக்டர் தினேஷ் கொக்கலகே தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தும் இடங்களில், மக்கள் சுகாதார வழிமுறைகளை மீறி செயற்படுகின்றமையினால், கொவிட் தடுப்பூசி கொத்தணி உருவாகும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.
Discussion about this post