மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளையும் மூட தீர்மானித்துள்ளதாக பேராயர் இல்லம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு அமையவே, தாம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலுள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளும் ஏப்ரல் மாதம் 30ம் திகதி வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொவிட் தொற்று அதிகளவில் பரவ ஆரம்பித்துள்ள பின்னணியிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post