தலாஹேன − மீகமுவ பகுதியைச் சேர்ந்த குழந்தை ஒன்று காணாமல் போயுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.
மிஷேலி பிரபாஷி என்ற 2 வயதும் 10 மாதங்களுமான குழந்தை ஒன்றே காணாமல் போயுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கூறுகின்றது.
இந்த குழந்தை தொடர்பில் தகவல் கிடைக்கும் பட்சத்தில் அறிய தருமாறு அதிகார சபை கூறியுள்ளது.
தகவல்களை அறிய தருவதற்காக தொலைபேசி இலக்கங்களையும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வெளியிட்டுள்ளது.
0112 -778911 அல்லது 1929 என்ற தொலைபேசி அழைப்புக்கு அறிய தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post