அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கையடக்கத் தொலைபேசி, சிறை வைக்கப்பட்டுள்ள ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு சொந்தமானது என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவினால், ஈசிகேஸ் முறையின் கீழ், 5 லட்சம் ரூபா பணத்தை செலுத்தி, இந்த தொலைபேசியை சிறைச்சாலைக்குள் கொண்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சிறைச்சாலை உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி, சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கான பொறுப்பு, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த குற்றம் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், சிறைச்சாலை கட்டளை சட்டத்தின் கீழ் ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என கூறப்படுகின்றது.
Discussion about this post