முழங்கால் வலி காரணமாக சிகிச்சைகளுக்காக கராபிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க, சிகிச்சைகளின் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து, ரஞ்ஜன் ராமநாயக்க, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முழங்கால் வலி காரணமாக கராபிட்டிய வைத்தியசாலையில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ரஞ்ஜன் ராமநாயக்க அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Discussion about this post