சிறை வைக்கப்பட்டுள்ள ரஞ்ஜன் ராமநாயக்கவுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா புகைப்படம் எடுத்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஞ்ஜன் ராமநாயக்கவை பார்வையிடுவதற்காக, பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
இவ்வாறு சிறைச்சாலைக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர், ரஞ்ஜன் ராமநாயக்கவுடன் புகைப்படம் எடுத்து, தனது பிரத்தியேக பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினருக்கு, கையடக்கத் தொலைபேசியை உள்ளே கொண்டு செல்ல அனுமதித்தமை மற்றும் புகைப்படம் எடுக்க அனுமதித்தமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்தே உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷனா ராஜகருணா மீது சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தனவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறினார். (TrueCeylon)
Discussion about this post