சிறைத்தண்டனை பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் சம்பளப் பணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றுவதற்கான தகுதி குறித்த கேள்விகள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ரஞ்சன் ராமநாயக்க தற்போது தண்டனை அனுபவித்து வருகிறார்.
இவர் எம்.பி.யாக பணியாற்றுவதற்கான தகுதி குறித்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை சம்பளத்தை நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி பதவி உரிமைக்காக கட்சி போராடும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவின் சம்பளத்தை நாடாளுமன்றம் நிறுத்தி வைப்பதால், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் வசதிகள் மற்றும் கொடுப்பனவுகயைம் சிறப்பு சலுகைகளையும் அவர் இழப்பார்.
Discussion about this post