நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க தனக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இந்த விடயத்தை பரிந்துரைத்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு காரணமாக ஜனவரி 12 ம் திகதி, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உச்ச நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
நீதிமன்றத்தில் தண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Discussion about this post