இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று தெரிவித்துள்ளார்.
தற்போது அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்பட்டதையடுத்து, எரிபொருள் கொள்வனவுக்கு தேவையான அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பின் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியிருந்தார்.
இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் போதே இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனைத் தெரிவித்தார்.