இறக்குவானை பகுதியைச் சேர்ந்த யுவதியொருவர் தொடர்பில் இன்று அரசியல் அரங்குகளிலும், பெட்டி கடைகளிலும் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
சிரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் லக்ஷபத்தி நிகழ்ச்சியில் பங்குப்பற்றிய பாக்யா அபேரத்ன என யுவதி குறித்தே இன்று அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
இறக்குவானையை அண்மித்துள்ள சிங்கராஜ வனப் பகுதியில் இடம்பெற்று வரும் காடழிப்பு குறித்து, லக்ஷபத்தி நிகழ்ச்சியில் பாக்யா தகவல்களை வெளியிட்டிருந்தார்.
இந்த தகவலை அடுத்து, பாக்யா தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில், பாக்யாவிடம் பொலிஸார் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.
இந்த நிலையில், பாக்யாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டமை தவறான விடயம் என எதிர்கட்சிகள் இன்று சுட்டிக்காட்டியுள்ளன. (TrueCeylon)
Discussion about this post