இரண்டாம் இணைப்பு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நண்பகல் ஆரம்பிக்கப்பட்ட ரயில் தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்றிரவு வரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
அலுவலக ரயில்களை மாத்திரம் அதுவரை கடமைகளில் ஈடுபடுத்த தாம் எதிர்பார்த்துள்ளதாக ரயில் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவிக்கின்றார்.
முதலாம் இணைப்பு
ரயில் சாரதிகளின் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல ரயில்வே தொழிற்சங்கங்கள் இணைந்து, பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன.
கணக்காய்வு சட்டத்திற்கு அமைய, ரயில் சேவைகளின் போது, இடம்பெறுகின்ற நட்டத்தை, ரயில் ஊழியர்களிடமிருந்து அறவிட்டுக் கொள்கின்றமைக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவிக்கின்றார்.
இந்த விடயம் தொடர்பில் ரயில் ஊழியர்களுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்று வருவதாக அவர் மேலும் கூறுகின்றார். (TrueCeylon)
Discussion about this post