மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணான்டோ பிரித்தானியாவின் உயர் நீதிமன்றத்தினால், விடுவிக்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட்மினிஷ்டர் நீதிமன்றத்தினால் அவருக்கு எதிராக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு, அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிவந்த மேஜர் ஜெனரல் பிரிங்க பெர்ணான்டோ, 2018ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி சுதந்திர தினத்தன்று, பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்களை அச்சுறுத்தும் விதமான செயற்பட்டதாக தெரிவித்தே, பிரியங்க பெர்ணான்டோ மீது பிரித்தானியாவில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. (TrueCeylon)
Discussion about this post