ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கோவிட் -19 தொடர்பான ஜனாதிபதி பணிக்குழு இடையே நடந்த சந்திப்பில், முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக நாடளாவிய ரீதியிலான கட்டுப்பாட்டு நடவடிக்கையை கடுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தயாராக இல்லை என்று அரசாங்க தகவலை மேற்கோளிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், தடுப்பூசி திட்டத்தை முழு வேகத்தில் முன்னெடுக்கவும், இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் தடுப்பூசி போடவும் பணிக்குழுவுக்கு ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா விரைவில் ஒரு அறிக்கையை வெளியிடுவார் என்றும் அந்த செய்தி வெளியாகி உள்ளது. (TrueCeylon)
Discussion about this post