6 லட்சம் அஸ்ட்ராசேனிகா கொவிட் தடுப்பூசிகளை பெற்றுத் தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா சாதகமான பதிலொன்றை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த விடயத்தை அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
கொவிட் தடுப்பு நடவடிக்கைகள், சுகாதார மற்றும் வைத்திய உபகரணங்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கும், ஜப்பான் அரசாங்கம் சாதகமான பதிலை வழங்கியுள்ளது. (TrueCeylon)
Discussion about this post