மேல் மாகாண கல்வித் திணைக்களத்தால் நாளை (15) நடைபெறவிருந்த இறுதிப் பரீட்சைகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
குறித்த பரீட்சைகள் இந்த மாதம் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் தரம் 9 க்கான கணிதம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களுக்கான பரீட்சைகள் 21ஆம் திகதியும், தரம் 10 மற்றும் 11ஆம் தரத்துக்கான பாட பரீட்சைகள் 22ஆம் திகதியும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளன.
நாளை (15) முன்னெடுக்கவிருக்கும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் பங்கேற்க தீர்மானித்துள்ளமையை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று மேல் மாகாண கல்விப்பணிப்பாளர் ஸ்ரீலால் நோனிஸ் தெரிவித்தார். (TrueCeylon)