எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புப் பதிவை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் இதுவரையில் அஞ்சல் வாக்குச்சீட்டுகள் வழங்கப்படாத காரணத்தினால் இவ்வாறு தபால் மூல வாக்களிப்புப் பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தினம் பின்னர் அறிவிக்கப்படும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.