ஹட்டன் கினிகத்ஹேன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உப பொலிஸ் பரிசோகர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஹட்டனிலிருந்து ஓட்டமாவடி வரை கொவிட் சடலங்களை கொண்டு சென்ற வாகனத்திற்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் பொலிஸார் சென்ற வேன் ஒன்றே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த 6 பேர், வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
காயமடைந்தவர்களில் 3 பொலிஸ் உத்தியோகத்தர்களும், 2 பொதுமக்களும், வேன் சாரதியும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Discussion about this post