பியகம – தெல்தொட பகுதியில் இன்றைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை சுகாதார அதிகாரிகள் மூடியுள்ளனர்.
குறித்த நிலையத்தின் இரண்டு ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பியகம சுகாதார மருத்துவ அதிகாரி நடத்திய சீரற்ற பி.சி.ஆர் பரிசோதனையில் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்தே அவர்கள் வேலை செய்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post