சீனாவின் கமினிஷ்ட் அரசாங்கத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட கடலோர பாதுகாப்பு சட்டத்திற்கு அமைய, சீனாவின் கடல் எல்லைக்குள் நுழையும் அனைத்து கப்பல்களையும் சுடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், பிலிப்பைன்ஸ் அரசாங்கம், அதன் கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் சீன கப்பல்களை சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கையானது, பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என பிலிப்பைன்ஸ் வெளிவிவகார பிரிவைச் சேர்ந்த டிடோரோ லொக்சின் தெரிவித்துள்ளார் என ஏஷியன் போஸ்ட் செய்திச் சேவை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இதுவரை எந்தவித பிரச்சினைகளும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு ஏற்படும் பட்சத்தில், வெறுமனே, முறைப்பாடு செய்யாது, அது பாரதூர பிரச்சினையாக உருவெடுக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இராஜதந்திர ரீதியில் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன், பெய்ஜிங்கிற்கு தமது கடும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சட்ட வரைவானது, உள்நாட்டிற்கு மாத்திரம் பொருத்தமானது என்றால், அது யாருக்கும் பாதிப்பில்லை என கூறிய அவர், அதுவே யதார்த்தம் எனவும் சுட்டிக்காட்டினார்.
எனினும், சட்டவிரோதமாக சீனா தங்களது கடல் என ஒரு பிரதேசத்தை அறிமுகப்படுத்தி, சட்டங்களை நிறைவேற்ற முயற்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு சீனா முயற்சிக்கும் பட்சத்தில், யுத்தம் ஏற்படும் என அவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கிழக்கு சீனக் கடலில் உள்ள தமது தீவுகளின் பாதுகாப்பை பலப்படுத்த ஜப்பான் நடவடிக்கை எடுத்து வருவதாக ஏஷியன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
பெய்ஜிங்கின் கடும் உத்தரவு சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தமது புதிய சட்டம், எந்தவொரு நாட்டிற்கும் எதிரானது அல்லவென மனிலாவிலுள்ள சீன தூதரகம் இந்த பிரச்சினையை திசை திருப்பும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளது.
இந்த சட்டம், சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே, வரையப்பட்டுள்ளதாகவும் தூதரகம் கூறியுள்ளது.
உலகிலுள்ள பல நாடுகள் தமது கடல்சார் சட்டங்களை மாற்றியமைத்துள்ளதாகவும், பிலிப்பைன்ஸ் நாட்டு கரையோர பாதுகாப்பு சட்டமும் 2009ம் ஆண்டு மாற்றப்பட்டதாகவும் தூதரகம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தமது ஆதரவை எந்த சந்தர்ப்பத்திலும் தமக்கு வழங்குவதாக ஜப்பான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தென் சீனக் கடலில் எந்தவொரு நாட்டுடனும் இணைந்து, ஒத்திகை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பிலிபைன்ஸ் நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post