தென்னாப்பிரிக்கவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸ் பிலிப்பைன்ஸ் நாட்டிலும் முதன் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அந்த வகையில் தென்னாப்பிரிக்க கொரோனா வைரஸ் மாறுபாட்டின் ஆறு புதிய வழக்குகளை பிலிப்பைன்ஸ் பதிவுசெய்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் சுகாதார அமைச்சகம் இன்று இதை தெரிவித்துள்ளது.
இந்த புதிய வைரஸூக்கு எதிராக தற்போதைய தடுப்பூசிகள் குறைவான செயல்திறனை கொண்டதாக இருக்கும் என்று கவலை எழுகின்றது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட 6 பேரில் மூன்று உள்நாட்டிலும், இரண்டு பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களும் உள்ளனர் என கண்டறியப்பட்டன.
மற்ற பாதிப்பின் தோற்றம் இன்னும் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
இதேவேளை பிலிப்பைன்ஸ் தனது கோவிட் தடுப்பூசி திட்டத்தை நேற்று ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post