ஃபைசர் மற்றும் பயோஎன்டெக்கின் COVID-19 தடுப்பூசி 12 -15 வயது வரையிலான சிறுவர் சிறுமியர்களுக்கு 100% பயனுள்ளதாக இருக்கும் என்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
2,260 இளம் பருவத்தினரிடம் முன்னெடக்கப்பட்ட சோதனையில் தடுப்பூசி பெற்ற பங்கேற்பாளர்கள் யாருக்கும் COVID-19 தொற்றவில்லை என்று நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பதை உறுதிப்படுத்துவது தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முக்கியமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
COVID-19 நோயால் குழந்தைகள் இறப்பது குறைவு என்றாலும், அவர்கள் நோய்வாய்ப்பட்டு வைரஸ் பரவுவது இன்னும் சாத்தியமாகும்.
ஃபைசர் தலைமை நிர்வாக அதிகாரி Albert Bourla இதை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் 12 முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பள்ளி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பு தடுப்பூசி போடுவதைத் தொடங்க நிறுவனம் நம்புகிறது என்று Albert Bourla கூறினார்.
Discussion about this post