போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர், இனவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.
பேலியகொட பொலிஸாரினால் சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட ஒருவரே, இவ்வாறு இனவாத செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
குறித்த நபரின் வங்கி கணக்குக்கு பெருந்தொகையான பணம், டுபாய் நாட்டிலிருந்து வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கிடைத்த பணத்தை கிண்ணியா பகுதியில் இயங்கும் இனவாத கொள்கையை கொண்ட குழுவொன்றுக்கு சந்தேகநபர் வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இதையடுத்து, குறித்த சந்தேகநபரை, பேலியகொட பொலிஸார், பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் நேற்றைய தினம் ஒப்படைத்துள்ளதாக அஜித் ரோஹன கூறுகின்றார். (TrueCeylon)
Discussion about this post