பதுளை – பசறை – 13ம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துடன் தொடர்புடைய ஏனைய தரப்பினருக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
வீதியில் கல் சரிந்திருந்த நிலையில், அதற்கு பொறுப்பு கூற வேண்டிய தரப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா என அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் கூறினார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வீதி அபிவிருத்திக்கான குத்தகையை மேற்கொண்டுள்ள தரப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பசறை பஸ் விபத்தில் 14 பேர் உயிரிழந்திருந்ததுடன், 30திற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)
Discussion about this post