கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கினிகத்ஹேன பகுதியிலுள்ள வளைவொன்றில், எரிபொருள் தாங்கிய கனரன கொள்கலனொன்றில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே, அந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதனால், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் கினிகத்ஹேன பொலிஸார் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதன்படி, ஹட்டன் வரை பயணிக்கும் வாகனங்கள் களுகல, பொல்பிட்டிய, நோர்வூட் வழியாக ஹட்டன் நோக்கி பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள், கம்பளை வீதியூடான பயணிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். (TrueCeylon)