பாராளுமன்ற பொதுச் செயலாளர் தனது பாராளுமன்ற உறுப்புரிமை நீக்க நடவடிக்கை எடுத்து வருவதை தடுத்து நிறுத்தும் வகையில், ரீட் தடையுத்தரவொன்றை விடுக்குமாறு கோரி, ரஞ்ஜன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளாது, தள்ளுபடி செய்வதாக மேன்முறையீட்டு நீதீமன்றம் இன்று அறிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொரயா ஆகிய நீதிபதிகள் தலையில் விசாரணை இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு 7 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post