நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த காலப் பகுதியில், பாதுகாப்பான முறையில் முதற்தர நட்சத்திர ஹோட்டல்களில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலால் வரித் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இந்த ஹோட்டல்களுக்கு செல்லும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வேறு நபர்களுக்கு மதுபானங்களை கொள்வனவு செய்ய முடியாது என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ள மதுபானசாலைகள் தொடர்பிலான தகவல்கள் சுற்றுலாத்துறை அதிகார சபையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. (LankaDeepa)
Discussion about this post