பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் 2,068 பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய பொறுப்பாளர் தெரிவித்தார்.
மேலும் குறித்த பயணிகள் 29 விமானங்களில் வருகைத்தந்துள்ளனர்.
சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து 103 பேரும், கட்டார் டோஹாவிலிருந்து 135 பேரும், மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துபாயிலிருந்து 116 பேரும் வந்துள்ளனர்.
இந்த காலக்கட்டத்தில் 69 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து பயணிகளும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள், அந்த நேரத்தில் அவர்கள் இரண்டு பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும்.
மேலும், 24 மணி நேரத்தில் 963 பயணிகள் 11 விமானங்களின் மூலம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Discussion about this post