இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரக்கூடிய வகையில் திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முன்னர் வெளியிடப்பட்டு இருந்த சுகாதார வழிகாட்டுதல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பயணங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தளபதி குறிப்பிட்டார். (TrueCeylon)
Discussion about this post