அரச சேவையை அத்தியாவசிய சேவையாக முன்னெடுத்து செல்வதற்கு, குறைந்தளவிலான ஊழியர்களை கடமைகளில் ஈடுபடுத்தும் வகையிலான சுற்று நிரூபம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரம் அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களங்களின் பிரதானிகளுக்கு வழங்கும் வகையில் இந்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியின் கையெழுத்தில் இந்த சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.
அரச சேவைக்காக அதிகாரிகளை ஈடுபடுத்தும் போது, கர்ப்பணித் தாய்மார்களை சேவைக்கு அமர்த்தாதிருக்க இந்த சுற்று நிரூபத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post