நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
இதன்படி, களுத்துறை மாவட்டத்தின் பொம்புவெல கிராம உத்தியோகத்தர் பிரிவும், கொழும்பு மாவட்டத்தின் மொறட்டுமுல்ல பகுதியின் வில்லோராவத்தை ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தின் கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்தெனிய பள்ளிய பட்டுமக, ரணவிரு தர்மசிறி மாவத்தை, ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்குல்விட்ட, இறக்குவானை பொலிஸ் பிரிவின் பொத்துபிட்டி வடக்கு, கலவானை பொலிஸ் பிரிவின் ஹபுகொட ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பொலிஸ் பிரிவின் இன்ஜம்சிறி, ஹட்டன் பொலிஸ் பிரிவின் போடைஸ் தோட்டம் ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறுகின்றார்.
Discussion about this post